இந்தியா

'சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது'

24th Jan 2022 03:01 PM

ADVERTISEMENT


புது தில்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளிவராது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இயின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யாம் பரத்வாஜ் இந்த தகவலை உறுதி செய்ததாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் ஜனவரி மத்தியில் முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பொங்கல் விடுமுறைகளைத் தொடர்ந்து ஜனவரி 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதையும் படிக்க.. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை வெளியீடு

ADVERTISEMENT

இது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சிபிஎஸ்இ பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT