இந்தியா

'பிப்.15-க்குப் பின் புதிய கரோனா பாதிப்பு குறையத் தொடங்கும்' 

ANI

புது தில்லி: நாட்டில் நாள்தோறும் பதிவாகும் புதிய கரோனா பாதிப்பானது பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதிக்குப் பின் குறையத் தொடங்குமென்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சில மாநிலங்கள் மற்றும் பெரு நகரங்களில் கரோனா பாதிப்பானது குறையத் தொடங்கி, கட்டுக்குள் வரத் தொடங்கியிருக்கிறது. பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பிறகு நாட்டில் புதிய கரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

கரோனா மூன்றாம் அலையின் அதிதீவிர தாக்கத்தை, கரோனா தடுப்பூசி குறைத்துள்ளது என்றும், இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்பிலிருப்பதாகவும், அதன்படி, நாட்டில் 74 சதவீத பெரியவர்கள், முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று காலை புதிதாக 3,06,064 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்படி, கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 20 சதவீதமாக உள்ளது. ஆனால், நேற்று காலை பதிவான புதிய பாதிப்பைவிட இது 27,469 குறைவாகும். அதேவேளையில், நேற்று கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 17.75 சதவீதத்திலிருந்து இன்று 20.75 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT