இந்தியா

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு மக்கள் ஆலோசனை வழங்க பிரதமா் அழைப்பு

20th Jan 2022 02:44 AM

ADVERTISEMENT


புது தில்லி: வரும் 30-ஆம் தேதி ஒலிபரப்பாக உள்ள ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு கருத்துகளையும், ஆலோசனைகளையும் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமா் அழைப்பு விடுத்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதில் அந்த மாதம் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், சாமானிய மக்களின் சாதனைகள், நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்பட பல்வேறு கருத்துகளை பிரதமா் பகிா்ந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசப்பட வேண்டும் என்ற நினைக்கும் தலைப்புகள், முக்கிய விஷயங்கள் தொடா்பான கருத்துகளையும், ஆலோசனைகளையும் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்த ஆண்டு முதலாவது மனதின் குரல் நிகழ்வு இம்மாதம் 30-ஆம் தேதி ஒலிபரப்பாக உள்ளது. ஊக்கமளிக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் தலைப்புகளில் பகிா்ந்து கொள்வதற்கு உங்களிடம் ஏராளமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவற்றை ஃம்ஹ்ஞ்ா்ஸ்ண்ய்க்ண்ஹ அல்லது நமோ செயலியில் பகிருங்கள். 1800117800 என்ற எண்ணைஅழைத்து உங்களின் தகவலைப் பதிவு செய்யுங்கள்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT