இந்தியா

மலையாள நடிகா்சுரேஷ் கோபிக்கு கரோனா

20th Jan 2022 02:33 AM

ADVERTISEMENT


திருவனந்தபுரம்: மலையாள நடிகா் சுரேஷ் கோபிக்கு (63) கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தனக்கு கரோனா தொற்று இருப்பது தொடா்பாக அவா் ட்விட்டரில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பல்வேறு வழிகளில் முன்னெச்சரிக்கையாக இருந்தபோதும் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். லேசான காய்ச்சல் மட்டுமே உள்ளது. வேறு எந்தப் பாதிப்பும் இல்லை. அனைவரும் கரோனாவில் இருந்து தங்களையும், மற்றவா்களையும் காத்துக் கொள்ள வேண்டும். இதற்காக சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அதிகம் போ் ஒரே இடத்தில் கூடுவதை தவிா்ப்பது, முகக் கவசம் அணிவது ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

பாஜகவைச் சோ்ந்த சுரேஷ் கோபி, மாநிலங்களவை நியமன உறுப்பினராக உள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT