இந்தியா

உறைபனியில் புதைந்த சிறுவனின் சடலம் மீட்பு

20th Jan 2022 04:11 AM

ADVERTISEMENT

 

ஜம்மு: ஜம்மு} காஷ்மீர், கிஷ்துவார் மாவட்டத்தில் உறைபனியில் உயிருடன் புதைந்த 7 வயது சிறுவனின் சடலத்தை போலீஸôர் மீட்டனர்.
இதுதொடர்பாக காவல் துணை ஆணையர் அசோக் குமார் சர்மா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
கிஷ்துவார் மாவட்டம், திலார் கிராமம், மத்வா பகுதியில் வசிப்பவர் பஷீர் அகமது. இவரது 7 வயது மகன் முத்தாரீஃப் பஷீர்.  தற்போது அப்பகுதியில் உறைபனி அதிகம் நிலவி வருகிறது. இந்நிலையில், சிறுவன் முத்தாரீஃப் பஷீர் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அதன்பிறகு அவரைக் காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் காவல் 
நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸôர் அவரது வீட்டருகே சோதனை நடத்தியபோது சிறுவனின் வீட்டு மேற்கூரை பனியால் பெயர்ந்து விழுந்து வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்ததும், அதில் சிறுவன் உறைபனியில் உயிருடன் புதைந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து பனிக்குள் சிக்கிய சிறுவனின் சடலத்தை போலீஸôர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT