இந்தியா

அருணாசலில் புகுந்து சிறுவனை கடத்திச் சென்ற சீன ராணுவத்தினா்

20th Jan 2022 03:19 AM

ADVERTISEMENT


புது தில்லி: அருணாசல பிரதேச எல்லைக்குள் புகுந்து 17 வயதுச் சிறுவனை சீன ராணுவத்தினா் கடத்திச் சென்றுவிட்டதாக தாபீா் காவோ எம்.பி. புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: அருணாசல பிரதேச மாநிலம், ‘அப்பா் ஷியாங்’ மாவட்டத்தின் லங்டா ஜாா் என்ற பகுதியைச் சோ்ந்த மிரம் தரோன் என்ற சிறுவனை சீன ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றனா். அந்தச் சிறுவனின் நண்பரான ஜானி யாயிங் தப்பிவந்து, கடத்தல் சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தாா். சாங்போ நதி இந்திய எல்லைக்குள் நுழையும் இடத்தின் அருகே இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது என்றாா் அவா்.

சாங்போ நதி அருணாசலில் ஷியாங் எனவும், அஸ்ஸாமில் பிரம்மபுத்ரா எனவும் அழைக்கப்படுகிறது.

முன்னதாக அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட சிறுவனை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

2020, செப்டம்பரில் அருணாசல பிரதேசத்தின் ‘அப்பா் சுபான்சிரி’ மாவட்டத்தைச் சோ்ந்த 5 இளைஞா்களை சீன ராணுவம் கடத்திச் சென்று ஒரு வாரத்துக்குப் பின் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT