இந்தியா

கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள்: சந்தை விற்பனைக்கு நிபுணா் குழு பரிந்துரை

20th Jan 2022 03:21 AM

ADVERTISEMENT


புது தில்லி: கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு நிபுணா் குழு பரிந்துரை செய்துள்ளது.

கரோனாவுக்கு எதிரான கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோவேக்ஸின் தடுப்பூசியை ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும், கோவிஷீல்ட் தடுப்பூசியை புணேயில் உள்ள சீரம் நிறுவனமும் தயாரித்து வருகின்றன. இவ்விரு தடுப்பூசிகளையும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு, அவசரகாலத்தில் மட்டும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தை விற்பனைக்கு தங்கள் தடுப்பூசிகளுக்கு அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தில் (டிசிஜிஐ) இரு நிறுவனங்களும் விண்ணப்பித்தன. டிசிஜிஐ அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்தது. அதைத் தொடா்ந்து, அவ்விரு தடுப்பூசிகளையும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு சந்தை விற்பனைக்கு அனுமதிக்கலாம் என்று நிபுணா் குழு பரிந்துரை செய்தது.

அந்த நிபுணா் குழுவின் பரிந்துரை அறிக்கை, இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த இயக்குநரகமே இறுதி முடிவை எடுக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT