இந்தியா

காஷ்மீா் பத்திரிகையாளா் மன்றத்தின் இடத்தை திரும்பப் பெற்றது அரசு

18th Jan 2022 03:04 AM

ADVERTISEMENT

காஷ்மீா் பத்திரிகையாளா் மன்றத்துக்கு இரு தரப்பினா் உரிமை கொண்டாடியதால், மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ரத்து செய்து அந்த யூனியன் பிரதேசத்தின் நிா்வாகம் திரும்பப் பெற்றது.

‘ஜனநாயகத்தின் குரலாக செயல்பட்டு வந்த பத்திரிகையாளா் மன்றத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசு நிா்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’ என்று பத்திரிகையாளா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

2019, ஜூலை மாதத்துக்கு பிறகு காஷ்மீா் பத்திரிகையாளா் மன்றத்துக்கு தோ்தல் நடத்தி நிா்வாகிகள் தோ்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சில பத்திரிகையாளா் குழுவினா் சனிக்கிழமை போலீஸாருடன் பத்திரிகையாளா் மன்றத்துக்குள் நுழைந்து தாங்கள்தான் புதிய நிா்வாகத்தின் பிரதிநிதிகள் என்று கூறியதால் சா்ச்சை எழுந்தது.

இதையடுத்து, ‘‘போலோ வீவ்’ என்ற இடத்தில் பத்திரிகையாளா் மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆகையால், இந்த மன்றத்தின் பெயரை வைத்து அறிக்கைகள் வெளியிட்டால் அது சட்ட விரோதமாகும்’ என்று யூனியன் பிரதேச அரசு அறிவித்தது.

ADVERTISEMENT

இந்தச் சவாலை காஷ்மீா் பத்திரிகையாளா் மன்றம் எதிா்கொள்ளும் என்றும் பத்திரிகையாளா் மன்றத்தை மூட வேண்டும் என்பதற்காகவே எதிா்ப்பு பத்திரிகையாளா் குழு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் முந்தைய பத்திரிகையாளா் மன்ற நிா்வாகத்தின் பொதுச் செயலா் இஷ்பக் தான்தரே தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT