இந்தியா

கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை

18th Jan 2022 01:12 PM

ADVERTISEMENT


டோலோ - 650 மாத்திரை, பெரும்பாலும் காய்ச்சலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதாகட்டும், மக்கள் தன்னிச்சையாகவே மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்வதாகட்டும் முதலிடத்தில் இருப்பதுதான்.

ஆனால், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான டோலோ - 650 மாத்திரை, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை சுமாராக ரூ.560 கோடி அளவுக்கு விற்பனையாகியுள்ளது. இதன் மூலம், மருந்து விற்பனையில் முன்னிலை வகித்து வந்த ஜிஎஸ்கே பார்மா - மருந்து நிறுவனத் தயாரிப்பான கால்பால், சுமோ எல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகளின் விற்பனை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் பாராசிட்டமால் மாத்திரிகளின் விற்பனை ஏறுமுகம் கண்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.28.9 கோடிக்கு டோலோ650 மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு டிசம்பரைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகமாகும்.

ADVERTISEMENT

நாட்டில் கரோனா அலை தீவிரமாகஇருந்த 2021, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்தான் நாட்டில் மாத்திரை விற்பனையும் உச்சம் தொட்டுள்ளது. அதே மாதத்தில் கால்பால் விற்பனை 28 கோடி ரூபாயாக இருந்தது.

ஏராளமான பாராசிட்டமால் மாத்திரைகள் இருக்கும்போது டோலோ-650 மாத்திரையின் விற்பனை உச்சம் தொடக் காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ந்ததில், பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு அது ஒரு மருந்தே தீர்வாக இருக்கும் என்பதும், பெரியவர்களுக்கு டோலோ-650-ஐ மருத்துவர்கள் பரிந்துரைப்பது அதிகம் என்பதும் ஒரு முக்கியக் காரணம்.

இதய நோய், சிறுநீரக தொற்று, நீரிழிவு போன்றவை இருக்கும் நோயாளிகள் கூட, டோலோ-650 மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். அது பாதுகாப்பானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இவ்வாறு கரோனா பேரிடரால், டோலோ-650 மாத்திரை பல சாதனைகளை முறியடித்திருக்கும் நிலையில், மீண்டும் அதே தேவை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், சமூக வலைத்தளங்களில் டோலோ-650 மாத்திரை தொடர்பான மீம்ஸ்களும் அதிகரித்துள்ளன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT