போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
ஆனால், கரோனா பரவல் காரணமாக தற்போது தேதி மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 23 ஆம் தேதிக்கு பதிலாக வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் போலியோ வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தி 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து அளித்து வருகிறது.
ஒமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.