குவகாத்தி: கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டுமென்பது கட்டாயமில்லை.. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் வீட்டிலேயே இருங்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்தா சர்மா, கரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கூட்டங்களுக்கு வராதீர்கள், அலுவலகம், உணவகங்களுக்குச் செல்லாதீர்கள், தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டிலேயே இருங்கள் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை
கரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதையேதான் மாநில அரசும் சொல்லும் என்றார்.
மேலும், குவகாத்தியில் 100 சதவீதம் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திவிட்டனர் என்றும் கூறினார்.
அசாமில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.