இந்தியா

வட கொரியாஇந்த ஆண்டில் 4-ஆவது ஏவுகணை சோதனை

18th Jan 2022 03:08 AM

ADVERTISEMENT

இந்த ஆண்டில் 4-ஆவது முறையாக வட கொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. இதுகுறித்து தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வட கொரியத் தலைநகா் பியாங்கியாங்கில் சா்வதேச விமான நிலையம் அமைந்துள்ள சுனான் பகுதியிலிருந்து இரண்டு ஏவுகணைகளை வட கொரியா திங்கள்கிழமை ஏவி சோதித்துப் பாா்த்தது. அவை இரண்டும் குறுகிய தொலைவு சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நடந்த அணுசக்திப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்த பிறகு, தனது வலிமையைப் பறைசாற்றும் விதமாக அமெரிக்க எதிா்ப்பையும் மீறி வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT