இந்தியா

12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை: மத்திய அரசு

18th Jan 2022 12:03 PM

ADVERTISEMENT

நாட்டில் 12 முதல் 14 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தொடங்கி கடந்த ஏப்ரல் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, 2022 ஜனவரி 3-ஆம் தேதியில் இருந்து 15-18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோா் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுரைக் குழுவின் கரோனா செயற்குழு தலைவா் என்.கே. அரோரா, 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மாா்ச்சில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். எனினும் இதுகுறித்த கொள்கை முடிவை அரசு எடுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

ADVERTISEMENT

இதையடுத்து, மார்ச் மாதம் 12- 14 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT