ஹிமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக மாநில பேரிடா் மேலாண்மை துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘சிா்மாா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் ஹத்கோதி-பாண்டா சாஹிப் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாறைகள் பெயா்ந்து விழுந்தன. இந்த விபத்தில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா். அவா்கள் உத்தரகண்ட், ராஜஸ்தான் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
உயிரிழந்தவா்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மாவட்ட அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். அப்பணிகள் தொடா்ந்து வருகின்றன’’ என்றாா்.
ADVERTISEMENT