பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியின் நெருங்கிய உறவினரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சட்டவிரோதமாக மண் குவாரிகள் நடத்துவது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து சன்னியின் நெருங்கிய உறவினரான பூபிந்தர் சிங் ஹனி உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.