இந்தியா

தில்லியில் 'மிகவும் மோசம்' பிரிவில் காற்றின் தரம்!

18th Jan 2022 11:34 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் 'மோசம்' பிரிவில் இருந்து 'மிகவும் மோசம்' பிரிவுக்குச் சென்றது. 

'மிகவும் மோசம்' பிரிவில் நீடிக்கும் காற்றின் தரக் குறியீடு 312 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 

காற்றில் இருக்கும் நுண்ணிய துகள்களின் அளவுகளான பி.எம். 2.5 மற்றும் பி.எம்.10 முறையே 135 மற்றும் 232 புள்ளிகளில் உள்ளன. 

இதனால் அடுத்த மூன்று தினங்களுக்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

நொய்டாவிலும் காற்றின் தரம் 341 புள்ளிகளுடன் 'மிகவும் மோசம்' பிரிவிலும், குருகிராமில் 280 புள்ளிகளுடன் 'மோசம்' பிரிவிலும் உள்ளது. 

தலைநகர் தில்லியில் திங்கள்கிழமை காற்றின் தரம் 'மோசம்' பிரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், பிகார், லக்னெள பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக காணப்படும் என்றும் பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் குளிர் அதிகம் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT