பிகாரில் அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர், 5 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக பதிவுகள் காட்டியதை அடுத்து, மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பிகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விபா குமாரி சிங். இவர் இதுவரை 5 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அரசுக்கு பதிவுகள் காட்டியுள்ளன.
இதையடுத்து, விதிகளை மீறி ஐந்து முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகக் கூறி, இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், விதிகளின்படி முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி உள்பட மூன்று தவணை தடுப்பூசிகளை மட்டுமே செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது பான் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாரோ தடுப்பூசிகளை பெற்றுள்ளதாக விளக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.