ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 12-க்கும் மேற்பட்டவர்களை ராணுவம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.
குப்வாரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அதிக பனிப்பொழிவு காரணமாக திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
தங்தார்-சௌகிபால் அச்சில் பொதுமக்கள் சென்ற வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது. அதைத்தொடர்ந்து அருகில் உள்ள ராணுவப் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த ராணுவ மீட்புக் குழுவினர், ஒரு குழந்தை உள்பட பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றினர்.
பனிக்கு அடியில் வாகனம் புதைந்து போவதற்குள் வாகனத்திலிருந்து கீழே குதித்ததால், தாங்கள் தப்பிக்க முடிந்ததாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மீட்புக் குழுவினரிடம் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பனி மேடுகளில் சிக்கிய வாகனத்தையும் மீட்டதாக ராணுவக் குழு தெரிவித்தனர்.