மிசோரத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்(என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இன்று காலை 7.52 மணிக்கு என்கோபாவின் 46 கி.மீ மையத்திலும், 15 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தின் ஜிசாங் பகுதியில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 4.29 மணிக்குத் தாக்கியதாக தகவல்கள் வெளியானது.
இதன் அதிர்வு அருணாச்சல பிரதேசத்தில் உணரப்பட்டது.
வடகிழக்கு பிராந்தியத்தில் கடந்த திங்களன்று, இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் அசாம் மற்றும் மணிப்பூரின் சில பகுதிகளை உலுக்கியது.
திங்களன்று 28 நிமிடங்கள் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.