தில்லியில் புதிதாக 11,684 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 52,002 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 11,684 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 22.47 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 17,516 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 28,481 பேருக்கு கரோனா தொற்று
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,34,181 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16,30,644 பேர் குணமடைந்துவிட்டனர். 25,425 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 78,112 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 1,51,314 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,87,09,662 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.