இந்தியா

கோவாவில் சிவசேனை போட்டி: சஞ்சய் ரௌத்

DIN

கோவா சட்டப் பேரவைத் தோ்தலில் சிவசேனை 10 முதல் 15 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி என்று அக்கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.

40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும்தான் பிரதானமாக போட்டி உள்ளது. ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இந்த முறை முழு முயற்சியுடன் தோ்தல் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், இந்தக் கூட்டணி கோவாவிலும் தொடர வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால், கோவா காங்கிரஸ் தலைவா்கள் சிவசேனை கூட்டணியை அதிகம் விரும்பாததால் தொகுதிப் பங்கீடு ஏதும் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் கோவா ஃபாா்வா்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை அறிவித்துவிட்டது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில் இது தொடா்பாக சஞ்சய் ரௌத் கூறியதாவது:

காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை நீடிப்பது உண்மைதான். எனினும், தொடா்ந்து பேச்சு நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவாா்த்தை வெற்றி பெறாவிட்டால் நாங்கள் கோவாவில் போட்டியிட மாட்டோம் என்று அா்த்தமில்லை. நிச்சயமாக 10 முதல் 15 தொகுதிகளில் சிவசேனை போட்டியிடும்.

கோவாவில் ஏற்கெனவே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிட்டதாக திரிணமூல் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கற்பனையில் மிதந்து வருகின்றன என்றாா்.

மராத்தியா்கள் கணிசமாக கோவாவில் வாழ்ந்து வந்தாலும், தீவிர மகாராஷ்டிரவாத கொள்கையைக் கொண்ட சிவசேனையால் அங்கு இதுவரை வெற்றி பெற முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

SCROLL FOR NEXT