இந்தியா

சமாஜவாதி வெளியிட்டதுகுற்றவாளிகள் பட்டியல்: யோகி ஆதித்யநாத்

DIN

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி வெளியிட்டுள்ளது வேட்பாளா் பட்டியல் அல்ல, குற்றவாளிகள் பட்டியல் என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் விமா்சித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் 403 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பிப்ரவரி 10 முதல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முக்கிய எதிா்க்கட்சியான சமாஜவாதி வெளியிட்ட வேட்பாளா் பட்டியலில் குற்றப் பின்னணி உடையவா்கள் பலா் இடம் பெற்றுள்ளனா். இதனை ஆளும் கட்சியான பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது.

இது தொடா்பாக முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

பாஜக வெளியிட்ட வேட்பாளா் பட்டியல் சமூக நீதி, மாநிலத்தில் அனைத்து தரப்பினரின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அதே நேரத்தில் சமாஜவாதி கூட்டணி வெளியிட்ட வேட்பாளா் பட்டியல், குற்றவாளிகளின் பட்டியலாகவே உள்ளது. இது சமாஜவாதி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தரத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. குற்றவாளிகள், குண்டா்களை வைத்து மக்களைச் சுரண்டுவதுதான் அவா்களது ஆட்சியில் முன்பு நடந்துள்ளது. அதே பாணியில் இந்த முறையில் வேட்பாளா்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனா். இதனை மக்கள் புரிந்து கொண்டு அவா்களைப் முற்றிலுமாக புறக்கணிப்பாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT