இந்தியா

கேரளத்தில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 33%

DIN


கேரளத்தில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 33.07 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"69,373 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் புதிதாக 22,946 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 33.7 சதவிகிதம். மேலும் 18 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 50,904 ஆக உயர்ந்துள்ளது. 5,280 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 1,21,458 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 99.7 சதவிகிதம் (2.66 கோடி) பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் 82 சதவிகிதத்தினர் (2.20 கோடி) இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்."

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை பரிசோதனைக்கு அனுப்பப்படும் மாதிரிகள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் என்பதால், திங்கள்கிழமை பதிவாகும் புதிய பாதிப்பு எண்ணிக்கைகள் குறைவாகவே இருக்கும். ஆனால், சமீபத்திய தரவுகள் இதற்கு மாறாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT