இந்தியா

அபுதாபி விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: ஹௌதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்பு

17th Jan 2022 04:40 PM

ADVERTISEMENT


அபுதாபியில் எண்ணெய் டேங்கர்கள் வெடித்ததற்கும், விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கும் ட்ரோன் தாக்குதல் காரணமாக இருக்கலாம் எனக் காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு அருகே மூன்று எண்ணெய் டேங்கர்கள் வெடித்தன. மேலும், அபுதாபி விமான நிலையத்தின் நீட்சியாகப் புதிதாகக் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்கரயில் வரும்போது தண்டவாளத்தில் தள்ளப்பட்ட பெண்; பதறவைக்கும் காட்சி

இதுபற்றி காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதற்கட்ட விசாரணையில், இதன் பின்னணியில் சிறிய பறக்கும் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது ட்ரோனாக இருக்கக்கூடும். அது இரண்டு இடங்களில் விழுந்துள்ளது. இதுவே வெடித்ததற்கும், தீ விபத்துக்கும் காரணமாக இருக்கும். அபுதாபியின் பிரதான விமான நிலையத்தின் நீட்சியாகப் புதிதாகக் கட்டப்பட்டு வரும் விமான நிலையப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது லேசான தீ விபத்துதான்.

ADVERTISEMENT

இந்த சம்பவங்களால் குறிப்பிடத்தக்க சேதங்கள் எதுவும் ஆகவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளன. தாக்குதலை தாங்கள்தான் நடத்தியாகத் தெரிவித்த ஹௌதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹியா சாரெய், இதுபற்றி மேற்கொண்டு தகவல்களை வெளியிடாமல், விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

2015 தொடக்கத்திலிருந்து ஏமன் நாட்டுடன் போரில் ஈடுபட்டு வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். ஏமன் தலைநகரைக் கைப்பற்றி சர்வதேச ஆதரவுடன் இருந்த அரசை ஈரான் ஆதரவைக் கொண்ட ஹௌதி கிளர்ச்சியாளர் வெளியேற்றினர். இதையடுத்து, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது சௌதி தலைமையிலான கூட்டணி தாக்குதல் நடத்துவதில் ஐக்கிய அரபு அமீரகம் முக்கியப் பொறுப்பு வகிக்கிறது.

Tags : Abu Dhabi
ADVERTISEMENT
ADVERTISEMENT