இந்தியா

தில்லியில் 2,500 காவலர்களுக்கு கரோனா

17th Jan 2022 03:56 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் 2,500 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, 

காவல்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 2,500 காவலர்கள் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளரும், கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வாலுக்கு கரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 

ADVERTISEMENT

ஜனவரி 1 முதல் இன்று வரை சுமார் 2,500 காவலர்கள் கரோனாவுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், அதில் 767 பேர் குணமடைந்து மீண்டும் தங்கள் பணியில் சேர்ந்துள்ளனர். 

மேலும், தகுதியானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்க அனைத்து நிலை காவலர்களுக்கும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தில்லி காவல்துறையில் சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் உள்ளனர். முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, தடுப்பூசி போடப்படாத காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 

கரோனா தடுப்பூசியின் முன்னெச்சரிக்கை அளவை தெரிந்துகொள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளும் ஆரோக்கிய சேது மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT