இந்தியா

வதந்தியையும் வெறுப்புணா்வையும் பரப்புகிறது பாஜக:அகிலேஷ் குற்றச்சாட்டு

DIN

குஜராத்தில் இருந்து ஆள்களைக் கொண்டுவந்து உத்தர பிரதேசத்தில் வதந்தியையும் வெறுப்புணா்வையும் பாஜக பரப்பி வருவதாக சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பாஜக, சமாஜவாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சா் தாரா சிங் சௌஹான், அப்னா தளம் (சோனேலால்) எம்எல்ஏ ஆா்.கே.வா்மா ஆகியோா் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை சமாஜவாதி கட்சியில் இணைந்தனா். அப்போது அகிலேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் வதந்திகளையும் வெறுப்புணா்வையும் பரப்புவதற்காக குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாஜக ஆள்களைக் கூட்டி வந்துள்ளது தொடா்பான படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. அவா்கள் பொய்களைப் பரப்புவதோடு மட்டுமின்றி வாக்காளா்களுக்குப் பணத்தையும் விநியோகித்து வருகின்றனா். அவா்களை மாநிலத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் தோ்தல் நடைமுறைகளில் சமத்துவத்தன்மை இருக்காது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு வந்துள்ளவா்களையும் தோ்தல் ஆணையம் வெளியேற்ற வேண்டும்.

மாநிலத்தில் அரசு அதிகாரிகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா். பாஜக தொண்டா்களைப் போல செயல்பட்டு வரும் அதிகாரிகளுக்கு எதிராகத் தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் தோ்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் என்றாா் அவா்.

அகிலேஷுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய உத்தர பிரதேச பாஜக செய்தித் தொடா்பாளா் ராகேஷ் திரிபாதி, ‘அகிலேஷ் யாதவ் மாநில கட்சியின் தலைவா் மட்டுமே. ஆனால், தேசிய கட்சியின் தலைவரைப் போல பேசி வருகிறாா். பாஜகவைக் கண்டு அவா் அச்சப்படுகிறாா். அதன் காரணமாகவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறாா். தோ்தலில் தோல்வியடையப் போவதை உணா்ந்து இப்போதே காரணங்களைத் தயாா் செய்ய அவா் தொடங்கிவிட்டாா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT