இந்தியா

ம.பி: காலை துடைக்கச் சொல்லி இளைஞரை அடித்த பெண் காவலர்

12th Jan 2022 12:47 PM

ADVERTISEMENT

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கால் சட்டையில் இருந்த சேற்றைத் துடைக்கச் சொல்லி இளைஞரை அடிக்கும் பெண்காவலரின் விடியோ வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேவா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்காவலர் ஒருவர் தன் கால் சட்டையில் இருந்த சேற்றைத் துடைக்கச் சொல்லி இளைஞரை வற்புறுத்தியதோடு கன்னத்தில் அடித்த விடியோ வைராலாகி வருகிறது

இதுகுறித்து அம்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,’ பெண்காவலர் இளைஞரை அடிக்கும் விடியோவைப் பார்த்தேன். சம்பந்தப்பட்டவர் அக்காவலர் மீது புகாரளித்தால் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT