இந்தியா

பஞ்சாப்: முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு கரோனா

12th Jan 2022 01:31 PM

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் அதிவேகமாகப் பரவும் கரோனாவால் தினசரி பாதிப்புகள் உச்சத்தை அடைந்து வருகிறது. பல மாநில அரசியல் தலைவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘ சிறிய அறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் அக்கட்சியில் இருந்து வெளியேறி பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினாா். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பேன் என வெளிப்படையாக அவா் அறிவித்தாா்.

ADVERTISEMENT

பஞ்சாப்பில் பிப்ரவரி-14 ஆம் தேதி மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்ததக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT