இந்தியா

கரோனா பரவலில் விதிவிலக்காக மாறும் மும்பை: என்ன நடக்கிறது?

12th Jan 2022 11:46 AM

ADVERTISEMENT

 

நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மும்பையில் தொடர்ந்து நான்காவது நாளாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மும்பையில் செவ்வாய்க் கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,647. எனினும் கடந்த திங்கள் கிழமை 13,648 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக் கிழமை 19,474 பேருக்கும், சனிக்கிழமை 20,318 பேருக்கும் கரோனா கண்டறியப்பட்டது.

படிக்கமகாராஷ்டிரத்தில் 481 மருத்துவர்களுக்கு கரோனா 

ADVERTISEMENT

மும்பை மாநகராட்சி முழுவதும் நேற்று (ஜன.11) 62,097 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது மற்ற நாள்களுடன் ஒப்பிடும்போது சற்று குறைவாகும்.

இது தொடர்பாக பேசிய மும்பை மருத்துவர் ஷாஷங்க் ஜோஷி, சுகாதாரத் துறையின் நடவடிக்கையால் மும்பையில் ஒமைக்ரான் பாதிப்பு படிப்படியாக குறையும். கரோனா தொற்றை பொருத்தவகையில், நகரங்களுக்கேற்ப பரவல் விகிதம்  மாறுபடும். ஆனால் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் 3 சதவிகிதம் உள்ளது. 33 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படுகிறது. 

படிக்கதில்லியிலிருந்து நல்ல செய்தி சொன்ன சுகாதாரத் துறை அமைச்சர்

மும்பையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவதுடன், பரவல் விகிதமும் குறைந்து வருகிறது என்று கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT