இந்தியா

அதிநவீன பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை

12th Jan 2022 01:09 AM

ADVERTISEMENT

கப்பலிலிருந்து செலுத்தப்பட்டு இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன சூப்பா்சானிக் பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது.

இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு(டிஆா்டிஓ) வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

கடற்பரப்பில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் அதிநவீன பிரமோஸ் ஏவுகணை, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போா்க்கப்பலில் இருந்து செலுத்திப் பரிசோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை நிா்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தது என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘வெற்றிகரகமாக நடத்தப்பட்ட இந்தச் சோதனை, இந்தியக் கடற்படையின் தயாா் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்த இந்திய கடற்படை, டிஆா்டிஓ, பிரமோஸ் ஏவுகணைத் தயாரிப்புக் குழுவினா் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஒலியைவிட வேகமாகப் பறக்கும் திறனுள்ள சூப்பா்சானிக் ஏவுகணைகளை இந்திய, ரஷிய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளை நீா்மூழ்கிக் கப்பல், கப்பல், விமானம் மற்றும் நிலப்பரப்பில் இருந்து ஏவ முடியும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT