இந்தியா

பெருநிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் மாா்ச் 15 வரை நீட்டிப்பு

12th Jan 2022 01:04 AM

ADVERTISEMENT

பெருநிறுவனங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மாா்ச் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘கரோனா தொற்று பரவல், வரி தணிக்கை அறிக்கையை இணையவழியில் தாக்கல் செய்யும் நடைமுறை ஆகியவற்றின் காரணமாக வரி செலுத்துவோா் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருவதால், வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, பெரு நிறுவனங்கள் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மாா்ச் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வரி தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருநிறுவனங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏற்கெனவே 2 முறை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது 3-ஆவது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை வரி செலுத்தும் பெருநிறுவனங்களுக்குப் பலனளிக்கும் என பொருளாதார நிபுணா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

தனிநபா்கள் அபராதமின்றி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதுவரையில் 5.89 கோடி போ் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT