இந்தியா

முடக்கப்பட்ட தகவல் - ஒலிபரப்புத்துறையின் டிவிட்டர் பக்கம்

12th Jan 2022 04:58 PM

ADVERTISEMENT


புது தில்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கம் இன்று சமூக விரோதிகளால் முடக்கப்பட்டு, பிறகு, அந்த சுட்டுரைக் கணக்கு மீட்கப்பட்டது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் சுட்டுரைக் கணக்கை முடக்கிய சமூக விரோதிகள், அதற்கு எலான் மஸ்க் என பெயர் மாற்றம் செய்து, நல்ல வேளை என்று சுட்டுரைப் பதிவையும் இட்டுள்ளனர்.

இதையும் படிக்க.. பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே எச்சரிக்கை

மத்திய அமைச்சகத்தின் சுட்டுரை கணக்கு மீண்டும் மீட்கப்பட்டு, அதில், சமூக விரோதிகள் பதிவிட்டிருந்த சுட்டுரைப் பதிவு நீக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் சுட்டுரைக் கணக்கு முடக்கப்பட்டு மீண்டும் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய  அமைச்சகத்தின் கணக்கு முடக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT