இந்தியா

ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க அதிக குடியேற்றம்: அமைச்சர்

12th Jan 2022 01:04 PM

ADVERTISEMENT


பெர்லின்: ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் உள்நாட்டுத் தயாரிப்பில் தொய்வு, வெற்றிகரமான ஆற்றல் மாற்றத்துக்கு ஆபத்து போன்றவற்றைத் தவிர்க்க அதிக குடியேற்றம் தேவைப்படுவதாக அந்நாட்டு பொருளாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் நாடு தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தற்போது சுமார் 3 லட்சம் வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறோம், இது மேலும் பல லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அமைச்சர் ராபெர்ட் ஹாபெக். செய்தியாளர் சந்திப்பின் போது, க்ரீன்ஸ் கட்சியின் தலைவருமான ராபெர்ட் ஹாபெக் கூறுகையில், தொழிலாளர் தேவையை ஈடுசெய்யாவிட்டால் உண்மையிலேயே நாம் உற்பத்தி பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

மேலும், இயற்கையாகவே, தகுதி, பயிற்சி மற்றும் குடும்பங்கள் மற்றும் வேலை போன்றவை ஒன்றோடு ஒன்று மிகச் சிறப்பாக இணைந்திருக்கும், ஆனால் ஜெர்மனியில், குடியேற்றம் அதிகரித்து, அனைத்துப் பகுதிகளிலும், பொறியாளர்கள், கைத்தொழில் செய்வோர் உள்ளிட்டோர் அதிகரிப்பார்கள். அனைத்தையும் நாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

ஜெர்மன் பொருளாதார நிறுவனம் கணித்திருப்பது என்னவென்றால், ஜெர்மனியில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குறைவாக இருக்கிறார்கள். அதாவது, வயதான தொழிலாளர்கள் அதிகளவில் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நிலையில், இளம் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வருவது குறைவாக இருக்கிறது. இந்த இடைவெளி 2029ஆம் ஆண்டுக்குள் சுமார் 6,50,000 ஆக அதிகரித்து, மிகப்பெரிய தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். இது 2030ஆம் ஆண்டில், தோராயமாக பணியாற்றுவோர் எண்ணிக்கையை வெறும் 50 லட்சமாகக் குறைத்துவிடும். 

பல காலமாகக் குறைந்துவரும் குழந்தைப் பிறப்புகள், சீரான குடியேற்றமின்மை போன்றவை, தொழிலாளர்கள் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் குறைத்துவிடுவதாகவும், இதனால், நாட்டில் மிகப்பெரிய எண்ணிக்கையிலானோர் ஓய்வூதியம் பெறும்போது, அதனை ஈட்டுவதற்கு, மிகக் குறைவான நபர்களே பணியாற்றி, கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆளும் கூட்டணி கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

தகுதி வாய்ந்த, வெளிநாட்டு தொழிலாளர்கள் ஜெர்மனி வந்து பணியாற்றுவதற்கு தற்போதிருக்கும் தடைக்கற்களை அகற்றி, தினக் கூலியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT