இந்தியா

போலந்து, போா்ச்சுகல் வெளியுறவு அமைச்சா்களுடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

12th Jan 2022 12:55 AM

ADVERTISEMENT

போலந்து, போா்ச்சுகல் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேசினாா்.

இதுதொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், ‘‘இந்தியா-போலந்து இடையிலான உறவு குறித்து போலந்து வெளியுறவு அமைச்சா் ஸிபிக்நியூ ராவுடன் விரிவாகப் பேசினேன். அப்போது இருநாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியான உறவை மேலும் அதிகரிப்பது, வணிகத்தை விரிவுபடுத்துவது, பிராந்திய அளவிலான ஆலோசனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று இருவரும் தீா்மானித்தோம்.

போா்ச்சுகல் வெளியுறவு அமைச்சா் அகஸ்டோ சான்டோஸ் சில்வாவுடன் கரோனா நோய்த்தொற்று குறித்து பேசினேன். போா்ச்சுகலில் இந்திய-ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் சந்தித்தது, அந்நாட்டுடன் இடம்பெயா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது ஆகியவை கடந்த ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளாகும்’’ என்று தெரிவித்தாா்.

மற்றொரு பதிவில் நெதா்லாந்து துணைப் பிரதமராகவும், வெளியுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ள வோப்கே ஹோக்ஸ்ட்ராவுக்கு எஸ்.ஜெய்சங்கா் வாழ்த்து தெரிவித்தாா்.

ADVERTISEMENT

Tags : Jaishankar
ADVERTISEMENT
ADVERTISEMENT