இந்தியா

தில்லியில் 27 ஆயிரத்தைத் தாண்டியது தினசரி கரோனா

12th Jan 2022 09:18 PM

ADVERTISEMENT


தில்லியில் புதிதாக 27,561 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,05,102 பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் 27,561 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 26.22 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்கமகாராஷ்டிரத்தில் புதிதாக 46,723 பேருக்கு கரோனா தொற்று

மேலும் 14,957 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 40 பேர் பலியாகிவிட்டனர்.

ADVERTISEMENT

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 1,88,395 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 22,579 பேர். 15 முதல் 17 வயதுடைய 49,319 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இதுவரை மொத்தம் 2,79,08,084 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT