இந்தியா

கேரளத்தில் மேலும் 76 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

12th Jan 2022 03:13 PM

ADVERTISEMENT

 

கேரளத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 76 பேருக்கு புதிய வகை கரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை கூறுவது..

கேரளத்தில் மேலும் 76 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் 9,066 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளன. மேலும் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

கேரளத்தில் ஒமைக்ரான் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 421 ஆக உயர்ந்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT