இந்தியா

ரத்தாகும் அறை முன்பதிவுகள்: கலக்கத்தில் தில்லி விடுதிகள்

12th Jan 2022 04:16 PM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலரும் தாங்கள் செய்திருந்த அறை முன்பதிவுகளை ரத்து செய்யத் தொடங்கியிருப்பதாக விடுதி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தில்லியில் ஐந்தாவது கரோனா அலை அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் தில்லி விடுதி உரிமையாளர்கள், மீண்டும் ஒரு சரிவைக் காணத் தொடங்கியிருக்கிறார்கள்.

கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் பலரும், இதுவரை 50 சதவீத அறை முன்பதிவுகளை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வார இறுதி நாளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுமே, விடுதி அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி முதல் வாரம் வரை எந்த முன்பதிவுகளும் இல்லை. முன்பதிவு செய்து சுற்றுலா வருவோரை விடவும், ரத்து செய்வோரே அதிகம் என்கிறார்கள்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT