இந்தியா

மகாராஷ்டிரத்தில் 481 மருத்துவர்களுக்கு கரோனா 

12th Jan 2022 11:13 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தில் 481 மருத்துவமனை மருத்துவர்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிர மருத்துவமனை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அவினாஷ் தஹிபால் கூறுகையில், 

இதுவரை மருத்துவமனை மருத்துவர்கள் 481 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் புதிதாக 34,424 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 18,967 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 22 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT