2021ம் ஆண்டு முடிந்து 2022 புத்தாண்டு பிறந்ததை நாடு முழுவதும் ஏராளமான மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கோவா, மும்பை, பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் வாண வேடிக்கைகளுடன் பொதுமக்கள் உற்சாக முழக்கமிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை பாந்த்ரா வோர்லி கடற்கரையில் வண்ண ஒலிக்கீற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள தங்கக்கோயிலில் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் குவிந்த மக்கள் விளக்குகளை ஏந்தியவாறு புத்தாண்டை வரவேற்றனர்.
கர்நாடகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டையொட்டி தில்லி நாடாளுமன்ற கட்டடம், மும்பை இந்தியா கேட், கொல்கத்தா ஹவுரா பாலம் போன்றவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.