புது தில்லி: நாட்டில், கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 31,000 பதிவாகியிருப்பதாகவும், கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பார்த்திராத எண்ணிக்கையாக இது இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் 2021ஆம் ஆண்டில் மட்டும்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 31,000 அளவுக்குப் பதிவாகியுள்து. இதில், பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. புத்தாண்டில் இஸ்ரேலிலிருந்து வந்திருக்கும் சற்று கவலை தரும் செய்தி
31 ஆயிரம் வழக்குகளில், 11 ஆயிரம் வழக்குகள், மரியாதையுடன் வாழ்வதற்கு உரிமையின் கீழ் அதாவது, பெண்களுக்கு உணர்வுப்பூர்வமாக பாதிப்பை ஏற்படுத்துதல் போன்றவை அடங்கும், வீட்டில் நடக்கும் வன்முறை தொடர்பாக 6,633 வழக்குகளும், வரதட்சணைக் கொடுமை என்ற அடிப்படையில் 4,589 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் 15,828 ஆகப் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லியில் 3,336 ஆகவும், மகாராஷ்டிரத்தில் 1,504, ஹரியாணாவில் 1,460 மற்றும், பிகாரில் 1,456 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.