புதுதில்லி: நாட்டில் வேகமாக பரவி வரும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,431-ஆக அதிகரித்துள்ளதாகவும், மகாராஷ்டிரத்தில் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களில் 488 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 943 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒமைக்ரான் வகை கரோனா தொற்று தற்போது 23 மாநிலங்களுக்கு பரவியுள்ளது. அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 454 பேருக்கும், தில்லியில் 351 பேருக்கும், தமிழ்நாட்டில் 118 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கேரளத்தில் 109 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் மாநிலத்தை தொடர்ந்து குஜராத்தில் 115 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக மணிப்பூர், லடாக், ஹிமாச்சல், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க | வைஷ்ணவ தேவி கோயில் கூட்டநெரிசலில் சிக்கி 12 பேர் பலி: பிரதமர் இரங்கல்
பாதிக்கப்பட்ட மாநிலங்கள் குறித்த தரவுகளின் பட்டியலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.