புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 406 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 22,775
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,48,61,579.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 8,949
இதுவரை குணமடைந்தோர்: 3,42,75,312.
நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.32% என்றளவில் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 406. உயிரிழந்தோர் விகிதம் 1.38 சதவிகிதமாக குறைந்துள்ளது.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,81,486.
இதையும் படிக்க |நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 1,431 ஆக அதிகரிப்பு
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,04,781. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.30 சதவிகிதமாக குறைந்துள்ளது.
கரோனா தடுப்பூசி: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,45,16,24,150 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 58,11,487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 67,89,89,110 பரிசோதனைகளும், வெள்ளிக்கிழமை மட்டும் 11,10,855 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | வைஷ்ணவ தேவி கோயில் கூட்டநெரிசலில் சிக்கி 12 பேர் பலி: பிரதமர் இரங்கல்