இந்தியா

சபரிமலை: காச்சிகூடா-கொல்லத்துக்கு சிறப்பு ரயில்

1st Jan 2022 06:52 AM

ADVERTISEMENT

சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் வசதிக்காக, காச்சிகூடா-கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

காச்சிகூடாவில் இருந்து ஜனவரி 2-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (07143) புறப்பட்டு, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூா் வழியாக கொல்லத்தை மறுநாள் இரவு 9.40 மணிக்கு அடையும்.

மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து ஜனவரி 4-ஆம்தேதி அதிகாலை 2.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(07144) புறப்பட்டு, கோயம்புத்தூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக காச்சிகூடாவை மறுநாள் காலை 6 மணிக்கு அடையும்.

இதுபோல, ஆந்திரமாநிலம் நரசப்பூா்-கொல்லம் இடையே மற்றொரு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த இரண்டு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT