கரோனா அச்சுறுத்தல் காரணமாக குடியரசுத் தலைவா் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவா் மாளிகை அருங்காட்சியகம் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட சனிக்கிழமை முதல் (ஜன. 1) தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகா் தில்லியில் உருமாறிய ஒமைக்ரான் தீநுண்மி பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் இந்தக் காலகட்டத்தில் குடியரசுத் தலைவரின் பாதுகாவலா்கள் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.