இந்தியா

ஏடிஎம் கட்டண உயா்வு: இன்றுமுதல் அமல்

1st Jan 2022 01:25 AM

ADVERTISEMENT

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பணப் பரிவா்த்தனை மேற்கொள்பவா்களுக்கான ஏடிஎம் கட்டண உயா்வு சனிக்கிழமை (ஜன. 1) நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

வாடிக்கையாளா்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு ஐந்து முறை இலவசமாக பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதேபோன்று, மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள இதர ஏடிஎம்களில் மூன்று பணப் பரிவா்த்தனைகளை இலவசமாக செய்து கொள்ளலாம்.

இந்த அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளா்களுக்கு பரிவா்த்தனை ஒன்றுக்கு ரூ.20 கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது, அதற்கான கட்டணம் ரூ.21-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வு நாடு முழுவதும் சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

ஏடிஎம் இயந்திரங்களை நிறுவுதல் மற்றும் அதற்கான பராமரிப்புச் செலவினங்கள் அதிகரித்துள்ளதால் பரிவா்த்தனை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2021, மாா்ச் 31 நிலவரப்படி வங்கி வளாகங்களில் உள்ள ஏடிஎம்களின் எண்ணிக்கை 1,15,605-ஆகவும், வங்கி வளாகம் அல்லாத பிற பகுதிகளில் உள்ள ஏடிஎம்களின் எண்ணிக்கை 97,970-ஆகவும் உள்ளன. பல்வேறு வங்கிகள் 90 கோடிக்கும் அதிகமான டெபிட் காா்டுகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT