இந்தியா

உ.பி.பேரவைத் தேர்தல்: விவசாயிகளைக் கொன்ற லக்கிம்பூரில் அதிக வாக்குப்பதிவு

23rd Feb 2022 08:55 PM

ADVERTISEMENT

 
உத்தரப் பிரதேசத்தில் 4ஆம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 57.45 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

படிக்கதெருக்களில் திரியும் கால்நடைகளின் பிரச்னை தீர்க்கப்படும்: உ.பி.யில் பிரியங்கா காந்தி

ரேபரேலி, லக்கிம்பூர் கெரி, உன்னாவ், லக்னெள உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குபதிவில் 624 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். 

ADVERTISEMENT

இதில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 57.45 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக விவசாயிகளைக் கொன்ற லக்கிம்பூர் கெரியில் 62.42 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பில்பித் தொகுதியில் 61.33 சதவிகித வாக்குகளும், ரேபரலியில் 58.40 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படவுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT