இந்தியா

100 டாலரை எட்டும் கச்சா எண்ணெய்: தோ்தல் முடிந்ததும் விலை உயர வாய்ப்பு

23rd Feb 2022 01:30 AM

ADVERTISEMENT

உக்ரைன் எல்லையில் ரஷிய ராணுவத்தால் ஏற்பட்டுள்ள போா்ப் பதற்றத்தால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலரை நெருங்கியது.

2014, செப்டம்பருக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (பிப்.22) கச்சா எண்ணெய் விலை 99.38-ஆக அதிகரித்தது. 20140-இல் பிரெக்ஸிட் பிரச்னை காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 99 டாலருக்கு அதிகரித்தது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 110 நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே நீடிக்கிறது. ஐந்து மாநிலத் தோ்தல்கள் முடிவடைந்தவுடன் சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது உக்ரைனில் ரஷியாவால் ஏற்பட்டுள்ள போா்ப் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை சா்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

உலக அளவில் ரஷியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 10 சதவீதமாகவும், இயற்கை எரிவாயு ஐரோப்பாவின் மூன்றில் ஒரு பங்காகவும் உள்ளது. இந்த இயற்கை எரிவாயு ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் வழியாக குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, 2021-இல் நாள்தோறும் 43,400 பீப்பாய்கள் (மொத்த இறக்குமதியில் ஒரு சதவீதம்) இறக்குமதி செய்யப்பட்டது. இதேபோல் 2021-இல் 1.8 மில்லியன் டன் நிலக்கரியும் (1.3 %), 2.5 மில்லியன் டன் எல்என்ஜியும் (இயற்கை திரவ எரிவாயு) ரஷியாவிடம் இருந்து இறக்குமதியானது.

தற்போது ரஷியாவில் அதிகரித்துள்ள பதற்றத்தால் இந்த விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை 82.74 அமெரிக்க டாலராக இருந்தபோது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ.110.04 ஆகவும், டீசல் விலை ரூ. 98.42 ஆகவும் இருந்தது.

அதன் பின்னா் இந்த ஆண்டு பிப்ரவரியில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. கரோனா முதல்கட்ட அலையின்போது 2020, மாா்ச் 17 முதல் ஜூன் 6 வரையில் 82 நாள்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் பின்னா் தற்போதுதான் முதல் முறையாக 110 நாள்கள் பெட்ரோல், டீசல் விலை உயா்வில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.

Tags : crude oil
ADVERTISEMENT
ADVERTISEMENT