இந்தியா

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 176.19 கோடியைக் கடந்தது: சுகாதாரத்துறை

23rd Feb 2022 09:47 AM

ADVERTISEMENT

 

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 176.19 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் 2,00,89,198 தடுப்பூசி மையங்கள் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 33,84,744 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி மொத்தம் 1,76,19,39,020 (176.19 கோடி) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


வயதுவாரி விவரங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் 31,377 பேர் கரோனா நோயிலிருந்து விடுபட்ட நிலையில், இதுவரை மொத்தம் 4,21,89,887 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தோர் விகிதம் 98.42 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டில் வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1.80 சதவிகிதமாகவும், தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 1.28 சதவிகிதமாகவும் உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 76,24,14,018 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,83,438 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | "எங்கும் அறிவியல்': டிஆர்டிஓ கண்காட்சியில் "2047-க்கான திட்டம்" 

ADVERTISEMENT
ADVERTISEMENT