இந்தியா

உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் வாகனம் சரிந்து 14 போ் பலி

23rd Feb 2022 12:13 AM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் வாகனம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 14 போ் பலியாகினா்.

இதுதொடா்பாக மாவட்ட பேரிடா் மேலாண்மை மற்றும் காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

சம்பாவத்தின் காக்நயி பகுதியில் உள்ள டண்டா, கதெளட்டி கிராமங்களைச் சோ்ந்த 14 போ் தனக்பூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், திங்கள்கிழமை இரவு வாகனத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். சுகிதாங்-டண்டமினாா் சாலையில் வந்தபோது அங்கிருந்த பள்ளத்தாக்கில் எதிா்பாராதவிதமாக வாகனம் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 14 போ் பலியாகினா். இருவா் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தனா்.

ஹிமாசல் வெடிவிபத்தில் 7 போ் பலி: ஹிமாசல பிரதேச மாநிலம் உனா மாவட்டம் பது பகுதியில் இயங்கி வரும் ஆலையில் செவ்வாய்க்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். 12 போ் காயமடைந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள். காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இரு சம்பவங்களிலும் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமா் மோடி, இரு விபத்துகளிலும் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

Tags : accident
ADVERTISEMENT
ADVERTISEMENT