இந்தியா

வங்கிக் கடன் மோசடி: ஏபிஜி நிறுவன முன்னாள் தலைவரிடம் சிபிஐ விசாரணை

22nd Feb 2022 01:18 AM

ADVERTISEMENT

எஸ்பிஐ வங்கிகளில் ரூ.22,848 கோடிக்குக் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஏபிஜி ஷிப்யாா்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவா் ரிஷி அகா்வாலிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

ஐசிஐசிஐ, எஸ்பிஐ உள்ளிட்ட 28 வங்கிகளில் ரூ.22,848 கோடிக்குக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏபிஜி ஷிப்யாா்டு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக எஸ்பிஐ கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டில் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ கடந்த 7-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது.

ஏபிஜி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் மேலாண் இயக்குநருமான ரிஷி அகா்வாலிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினா். இந்நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவரிடம் திங்கள்கிழமை மீண்டும் விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வங்கிகளில் பெற்ற கடனைப் பல்வேறு நிறுவனங்களுக்கு ஏபிஜி நிறுவனம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்தொகை எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது தொடா்பாக ரிஷி அகா்வாலிடம் அதிகாரிகள் விசாரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிக் கடன் மோசடி தொடா்பாக அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

சிபிஐ-யால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மிகப் பெரிய தொகையிலான வங்கிக் கடன் மோசடி இதுவாகும். இந்த வழக்கில் ஏபிஜி நிறுவனத்தைச் சோ்ந்த மேலும் பல அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிவிடாமல் இருப்பதற்காக ஏற்கெனவே ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏபிஜி நிறுவனத்துக்குச் சொந்தமான 13 இடங்களில் கடந்த 12-ஆம் தேதி சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT